Consultation on Labour Law Reforms on 30th June 2026
Dabindu Collective successfully conducted a Consultation on Labour Law Reforms, bringing together women workers and Civil Society Organization (CSO) representatives for a meaningful discussion on advancing workers’ rights and inclusive labour law reforms.
The consultation provided a space to discuss the ground realities faced by women workers, share evidence-based recommendations for the ongoing labour law reform process, and emphasize the importance of ensuring that women’s voices are meaningfully represented in policy discussions.
The session also included a discussion on ILO Convention No. 190 (C190), highlighting its significance in preventing and addressing violence and harassment in the world of work, and the importance of aligning labour laws with international labour standards.
The session was facilitated by a team of lawyers, who guided participants through insightful discussions and legal perspectives.
කම්කරු නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ සාකච්ඡාව – 30. 06.2026
ඩාබිඳු සාමූහිකය විසින් කම්කරු නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ සාකච්ඡාවක් සාර්ථකව පවත්වන ලදී. මෙම සාකච්ඡාව සඳහා කාන්තා කම්කරු නියෝජිතයන් සහ සිවිල් සමාජ සංවිධාන (CSOs) නියෝජිතයන් එක්ව, කම්කරු අයිතිවාසිකම් සහ සාධාරණ, සියලු දෙනා ඇතුළත් කම්කරු නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ අර්ථවත් සංවාදයක නිරත වූහ.
මෙම සාකච්ඡාවේදී කාන්තා කම්කරුවන් මුහුණ දෙන සැබෑ අභියෝග පිළිබඳව අදහස් හුවමාරු කරගත් අතර, කම්කරු නීති ප්රතිසංස්කරණ ක්රියාවලිය සඳහා සාක්ෂි පදනම් කරගත් යෝජනා ඉදිරිපත් කිරීමත්, එම ක්රියාවලිය තුළ කාන්තාවන්ගේ හඬ අර්ථවත් ලෙස නියෝජනය වීමේ වැදගත්කමත් අවධාරණය කෙරිණි.
එමෙන්ම, ජාත්යන්තර කම්කරු සංවිධානයේ 190 වන සම්මුතිය (ILO Convention No. 190 – C190) පිළිබඳව ද සාකච්ඡා කරමින්, රැකියා ස්ථානයේ සිදුවන හිංසනය හා පීඩනය වැළැක්වීම සහ ඒවාට ප්රතිචාර දැක්වීම සඳහා එහි ඇති වැදගත්කම පිළිබඳව අවධානය යොමු කරන ලදී.
මෙම සැසිය නීතිඥවරුන් විසින් මෙහෙයවන ලද අතර, ඔවුන්ගේ නීතිමය දැනුම සහ මඟපෙන්වීම මෙම සාකච්ඡාව වඩාත් සාර්ථක හා ඵලදායී එකක් බවට පත් කළේය.
සාධාරණ, සමානාත්මතාවය සහ සියලු දෙනාගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කරන කම්කරු නීති පද්ධතියක් වෙනුවෙන් අපගේ හඬ තවදුරටත් එක්ව ශක්තිමත් කරමු.
தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் – 30.06.2026
டாபிந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண் தொழிலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் (CSOs) பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நீதியான தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் குறித்து அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் பகிரப்பட்டதுடன், நடைபெற்று வரும் தொழிலாளர் சட்டத் திருத்த செயல்முறைக்காக ஆதாரபூர்வமான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. மேலும், தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும் செயல்முறையில் பெண்களின் குரல் அர்த்தமுள்ள வகையில் பிரதிபலிக்கப்பட வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 190ஆம் உடன்படிக்கை (C190) குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பணியிடங்களில் நடைபெறும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதிலும், அவற்றை எதிர்கொள்வதிலும் C190-ன் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டன.
இக்கலந்துரையாடலை சட்டத்தரணிகள் வழிநடத்தினர். அவர்களின் சட்ட அறிவும் வழிகாட்டுதலும் கலந்துரையாடலை பயனுள்ளதாக்கியது.
அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும், சமத்துவமான மற்றும் உள்ளடக்கிய தொழிலாளர் சட்டங்களுக்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.













